வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும் முன்னாள் வங்காளதேச அணியின் கேப்டணுமான ஷகிப் அல் ஹசன் ஊழல் விதிமுறைகளை மீறியதற்காக ஐ.சி.சி விதித்த 1ஆண்டு இடைக்கால தடையை அனுபவித்து வருகின்றார்.
ஷகிப் அல் ஹசன் சென்ற கிழமை அமெரிக்காவுக்கு தன்னுடைய மனைவி, மகளை பார்ப்பதற்காக சென்ற நேரம் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
அங்கு சென்ற நான் அங்குள்ள நிலையை கருத்தில் கொண்டு நானாகவே தனிமைப் படுத்திக் கொள்ள முடிவு செய்து அமெரிக்கா விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஹோட்டலுக்கு சென்றேன்.
மேலும் 14 நாட்கள் தனிமையில் தங்கி இருப்பதாக மனைவிக்கும், மகளுக்கும் அறிவித்து விட்டேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
ஆனாலும் கவலைக்குரிய விடயம் இவ்வளவு கொடிய நோய்களுக்கு மத்தியில் சென்றும் என்னுடைய குடும்பத்தை பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த தருணத்தில் இந்த தியாகம் மிகவும் முக்கியமானதாகும் என்று நினைக்கிறேன். வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது முக்கியமானதாகும். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். அடுத்த 14 நாட்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.