திருகோணமலை 4ம் கட்டையில் அமைந்துள்ள இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தினை, திருகோணமலை மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்திவைக்கும் நிலையமாக பயன்படுத்த கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சினிலமே அவர்களால் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பிரேமானந்த் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது இன்று (25) காலை இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் நகரசபை உருப்பினர்கள் பிரதேசசபை உருப்பினர்கள் வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

குறித்த இயந்திரங்கள் அனைத்தும் அமைச்சரது சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டதாகவும் இந்த பேரிடரிலிருந்து எம் நாட்டினை காத்துக்கொள்ள பலர் சுயமாக முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply