கொரோனா காரணமாக வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள வறிய மக்களின் நலன் கருதி அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் 7 மில்லியன் பெறுமதியான உலர் உணவு பொருட்களை அன்பளிப்பு செய்கிறது!
இதன்படி கொழும்பு, வத்தளை, ஹெந்தளை மற்றும் களனி பகுதியை சேர்ந்த சுமார் 3500 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3000 ரூபா பெறுமதியான அத்தியவசிய உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
நாட்டு நிலமை கருதி தாமாகவே முன்வந்து இத்தகைய பணியை செய்யும் அக்பர் பிரதர்ஸ் #Akbar_Brothers குடும்பத்தார்களுக்கும் அதன் ஊழியர்களுக்கும் நமது வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
வியாபாரத்துறையில் கொடிகட்டி பறக்கும் ஏனைய நிறுவனங்களும் இதுபோன்று இன மத வேறுபாடின்றி முன்வந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதே நமதும், மக்களதும் எதிர்பார்ப்பாகும்.