கடந்த 2013 ஆம் ஆண்டு 3.6 கிராம் எடையுடைய ஹெரோஹின் போதை பொருளை மறைத்து வைத்து சிறைச் கைதிகளுக்கு விற்பனை செய்ய 60 வயதான மூதாட்டிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற காலத்தில் இருந்தே விளக்கமறியலில் இருந்த மூதாட்டிக்கே இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 30 ஆம் திகதி குறித்த மூதாட்டி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவர் தனது பிறப்பு உறுப்பின் ஊடாக 3.6 கிராம் எடையுடைய ஹெரோஹின் போதை பொருளை மறைத்து வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

குற்றவாளியிடம் இருந்து 216 பிளாஸ்டிக் பைக்கற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதை பொருட்கள் கைப்பற்ற்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்தது.

நீண்ட வழக்கு விசாரணைக்கு பின்னர் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தயமை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் 60 வயது முதியவர் என்பதால் அவருக்கு விதிக்கப்படும் தண்டனையை குறைந்து குற்றவாளி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.

இதன் பின்னர் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி குறித்த மூதாட்டிக்கு ஆயூள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Leave a Reply