32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதத்தில் இருந்து டோக்கியோவில் நடைபெற இருந்தது.
ஆனால் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக முடிவு செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா? என்பதில் நம் எல்லோருக்கும் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது, உலகின் பல நாடுகளும் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்றே வலியுறுத்தின.
இதனடிப்படையில் ஆஸ்திரேலியா, கனடா ஒலிம்பிக்கில் இருந்து அதிரயாக விலகின. ஐ.ஓ.சி ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர இன்னும் 4 வாரங்கள் காத்திருக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் நேற்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவரை டெலிபோனில் தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமையில் ஒலிம்பிக் போட்டி சந்திக்க வேண்டிய சவால்களை விவரித்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளி வைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனை முழு மனதாக ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஏற்றுக் கொண்டார்.