Nissan (நிசான்) நிறுவனம் ஐரோப்பாவை விட்டும் வெளியேற முடிவு செய்திருப்பதால் 3000 பேர் வேலையிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான நிசான் (Nissan), ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவிலுள்ள தனது ஆலையை மூட முடிவு செய்துள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் சுமார் 3,000 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்கள் தற்போது வேலையிழக்கும் ஆபத்தான நிலை உருவாகியிருப்பது கவலையளிக்கிறது.

ஆலையை தொடர்ந்து இயக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் மூட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் அரஞ்சா கோன்சலஸ் லயா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆசியாவில் தொழிலில் கவனம் செலுத்துவதற்காக (Nissan) நிசான் நிறுவனம் ஸ்பெயினை மட்டுமல்லாமல் ஐரோப்பாவை விட்டே வெளியேற முடிவெடுத்திருப்பது வருத்தமளிக்கிறது. தொழிலை தொடர்ந்து நடத்த அரசு எல்லா வகையிலும் முயற்சி எடுத்தும் இந்த நிலை உருவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கார் உற்பத்தியில் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பார்சிலோனா Nissan நிசான் ஆலையில் உற்பத்தியை நிறுத்துவதாக நிசான் Nissan நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்பெயின் தொழில்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டதாக அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

கார்களுக்கான தேவை குறைந்துள்ளதாலும், Coronavirus (கொரோனா) கொள்ளை நோய் தாக்கத்தாலும் நிசான் நிறுவனம் 620 கோடி டாலர் நிகர இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக ஐரோப்பாவை விட்டே வெளியேற நிசான் முடிவெடுத்திருக்கிறது.

By Admin

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.