எல்ல பகுதியில் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பயணிகள் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் இருந்தே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் குறித்த பேருந்தை சோதனையிட்ட போது, மதிய உணவுப்பொதி எனக் கூறும் சிறிய சந்தேகத்திற்கிடமான பொதி சாரதியின் இருக்கைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பொதியை பரிசோதித்த காவல்துறையினர் அதில் இருந்து 143 கிராம் ஹெராயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.