இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1011பேர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் 1351 பேர்கள் படிப்பிற்காகவும், தொழில் நிமித்தமாக வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உள்ளானோர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். மேலும் அவர்களிடம் ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு போதனா வைத்தியசாலை தயாரகவுள்ளதாகவும் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் திருமதி Dr.கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.