இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு 2030-ம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக 2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மற்றும் வேன்களுக்கு தடை விதிக்கப்படும் என அவர் அறிவித்தார்.

இந்தத் திட்டம் இங்கிலாந்தின் தேசிய உள்கட்டமைப்பை மின்சார வாகனங்களுக்கு சிறந்த ஆதரவாக மாற்றுவதில் கவனம் செலுத்தும். இதன் மூலம் சாலைப் போக்குவரத்தில் கார்பன் வாயு அளவை குறைத்த முதல் ‘ஜி7’ நாடாக இங்கிலாந்து திகழும். என்று அவர் தெரிவித்தார்.

By Admin

Leave a Reply

You missed