Month: April 2024

லெய்ஸ்மனியாசிஸ் என்று சொல்லப்படும்  தோல் நோய்…!

Leishmaniasis( லெய்ஸ்மனியாசிஸ்) தற்போது இலங்கையில் பல பகுதிகளில் பரவிவரும் ஓர் தோல்நோய். நோய் உருவாக்கும் கிருமி- Leishmania donovaniநோய் பரப்பும் பூச்சி- sand fly இது நோய்…

பிரசவத்தின் போது கணவருக்கு அனுமதி..!

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது கணவர் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரச வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.…

திருகோணமலை குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

திருகோணமலை குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு (கரடி மலை) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று…

கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு..!

நுவரெலியா – மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையமொன்று சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு…

கிண்ணியா தள வைத்தியாசாலையை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான Master Plan!

கிண்ணியா தள வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் முயற்சியுடன் ஏனையவர்களது ஒத்துழைப்புடன் முனைச்சேனைப் பிரதேசத்தில் புதிய காணி பெறப்பட்டு,அக்காணியில் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான Master Plan…

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் இப்தார் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வானது நேற்று (03) திருகோணமலை மாவட்ட…

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்கள் இலவசம்!

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் சகல பாடசாலைகளிலும் சுமார் 4மில்லியன்…

கிண்ணியா கரையோர அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராய்வு; கிழக்கு ஆளுநருடன் தௌபீக் எம்.பி களத்தில்!

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களால் கிண்ணியா உப்பாறு தொடக்கம் கங்கை வரையிலான கரையோரப் பகுதியில் கரையோர நடைபாதை (Beach Walking Path – Kinniya)…

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.