ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரசால் அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 93 ஆயிரம் பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை அடுத்து கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் குறைந்த அளவிலேயே செயல்திறன் மிக்கதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.

By Admin

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.