2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒருவருக்கு தேவைப்படும் சிறந்த ஸ்மார்ட்போனை தேடுவது சிக்கலான காரியம் தான். ஆனால், பரிந்துரைகளால் ஓரளவு சிறந்த மாடலை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் 2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பட்டியலில் சிறந்த ஸ்மார்ட்போனாக ஒரு மாடல் தேர்வு செய்யப்படாமல் பேட்டரி பேக்கப், டிஸ்ப்ளே என பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சிறந்த ஐபோன் மாடலாக ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் தேர்வாகி இருக்கிறது. இது 5ஜி வசதி கொண்டிருப்பதால் இந்த பட்டத்தை பெற்று இருக்கிறது.
இதுமட்டுமின்றி மற்ற மாடல்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப், பெரிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்த ஆண்டுக்கான சிறந்த ஐபோன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
2021 ஆண்டுக்கான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி தேர்வாகி இருக்கிறது. பெரிய டிஸ்ப்ளே மட்டுமின்றி, எஸ் பென் வசதி, குறைந்த விலை உள்ளிட்ட அம்சங்களால் இது சிறந்த ஆண்ட்ராய்டு போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
சிறந்த பட்ஜெட் போன் என்ற பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி தேர்வாகி இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் சிறப்பான 5ஜி வசதி வழங்கியதால் இந்த மாடல் சிறந்த பட்ஜெட் போனாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. (Malaimalar thokuppu)