இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

முதல் பொலிஸ் மா அதிபராக ஜோர்ஜ் வில்லியம் றொபின்சன் பதவி வகித்தார்.இலங்கையைச் சேர்ந்த ஒருவர் முதலாவது பொலிஸ் மா அதிபராக 1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரது பெயர் சிறிமத் றிச்சேர்ட் அலுவிகார தற்போதைய பொலிஸ் மா அதிபரான சி.டி.விக்கிரமரத்ன இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராவார். பொலிஸ் சேவையில் சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் சேவையாற்றுகின்றனர்.

1865 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக பிரத்தாணியா ஆட்சிக் காலத்தில், பொது மக்களுக்கு ஒழுங்கமைவு முறையிலான சேவையினை வழங்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் 1866 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 03 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அன்று தொடக்கம் இன்று வரை 155 ஆண்டுகளுக்கு அண்மித்தக் காலப் பகுதி இலங்கை பொலிஸ் ‘நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும்’ பாதுகாத்து பேணிச ; செல்லும் கடமைப் பொறுப்பினை நிறைவேற்றுகின்றது. மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு துறைகளதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு இலங்கை பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் நல்லிருப்பிற்கு அடிப்படையாகக் கொள்ளப்படும் குற்றங்களை இல்லாதொழித்தல் மற்றும் நிவாரணம், போதைப் பொருள் பாவனையை தடுத்தல், ஊழல் ஒழிப்பு, மோட்டார் வாகனக் கட்டுப்பாடு, சுற்றாடல் பாதுகாப்பு, அனர்த்தங்;கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் பிரமுகர்களின் பாதுகாப்பு போன்ற பிரதான கடமைப் பொறுப்புகள் பொலிஸின் கடைமைகளுக்கு உட்பட்டதாகும்.

இந்த கடமைப் பொறுப்புகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு 24 மணித்தியாளங்கள் முழுவதும் கடமையில் பொலிசார் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

By : Government news

By Admin

Leave a Reply