இலங்கையில் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 835கி.மீ தூரத்தில் போதைப்பொருற்களுடன் கப்பல் ஒன்றை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்த கப்பலில் எந்தவொரு நாட்டின் கொடிகள் ஏற்றப் படாத நிலையில் கடந்த 28ம் திகதி சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்டது.
கப்பலை பரிசோதனை செய்த கடற்படையினர் 500 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் ரக போதை பொருள் மற்றும் 500 கிலோ கொக்கெயின் மற்றும் 200 பக்கெட் பாபுல் போதைப் பொருள் மற்றும் 100 கிராம் அடையாளம் தெரியாத மாத்திரைகள் ஆகியனவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப் பொருட்களின் பெறுமதி இன்னும் மதிக்கப்படவில்லை, எனினும் ரூ. 12,500 மில்லியனுக்கும் அதிக பெறுமதியை கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.
மேலதிக விசாரணைக்காக குறித்த கப்பல் இன்று திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.