இலங்கை, அந்நிய செலாவணியை ஈட்டும் முக்கியத் துறையாக விளங்கும் பெருந்தோட்டத்துறையின் வேதன அதிகரிப்பு இன்னும் கானல் நீராகவே உள்ளது.

காலநிலை மற்றும் தற்போதைய பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை வேதனமாக குறைந்தபட்சம் 1700 ரூபாவை வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்களும் அந்த தொகையினையே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வருகின்றன.

மூன்று வருடங்களுக்கும் அதிகமாக, கூட்டு ஒப்பந்தம் இரத்தாகியுள்ள நிலையில், வேதன நிர்ணய சபையின் ஊடாக குறித்த தொகையினை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வேதன நிர்ணய சபையின் இரண்டு கூட்டங்களையும் புறக்கணித்தன.

இதனால், மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை வேதன நிர்ணய சபை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மே தினத்திற்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும் என தொழிற்சங்கத்தினரும் மலையக அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.

அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனத்தை வழங்குவதற்கான விலைச் சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இன்னும் அதுவும் நிறைவேற்றப்படாதுள்ளது.

இந்தநிலையில், புதிய வாக்குறுதிகளுடன் தொழிற்சங்கங்கள் நாளை மே தின கூட்டத்திற்கு தயாராகின்ற நிலையில் இந்த வருட மே தினமும் கறுப்பு மே தினமாக அமைந்துள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.