இலங்கை CoViD-19 தொற்றிலிருந்து வெளியேறும் உபாயங்கள் சம்பந்தமான அரச வைத்தியர் சங்கம் (GMOA) மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) என்பன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் களங்கப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த அறிக்கை கண்டனத்துக்குரியது.CoViD-19 தொற்றிலிருந்து இலங்கை வெளியேறுவதற்கான வழிகாட்டல்கள் எனும் குறித்த இவ்வறிக்கை ஜனாதிபதி அவர்களுக்கு 2020 ஏப்ரல் 4ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை அவமானப்படுத்தி, இன குரோதத்தை ஏற்படுத்தும் குறித்த அறிக்கையில் “முஸ்லிம் சனத்தொகை” CoViD-19 தொற்றை பரப்பும் மாறிகளுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை நேரடியான கண்டனத்துக்குரியது.நான் இந்த அறிக்கையை தயார்படுத்திக்கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட ஆவணத்தில் முஸ்லிம்களை CoViD-19 ஊக்குவிப்பு மாறியாக காட்டும் வாசகம் திருத்தப்பட்டிருப்பதை அறிந்தேன். ஆனாலும், குறித்த ஆவணம் ஏற்கனவே வெளியிடப்பட்டு, சுற்றுக்கும் விடப்பட்டுள்ளதால் நான் இந்தக் கண்டனத்தை பதிவுசெய்வது அவசியமாகின்றது.“இலங்கை COVID-19 தொற்றிலிருந்து வெளியேறும் உபாயங்களை வெளிப்படுத்தும் இலங்கை அரச மருத்துவர் சங்கம், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் என்பவற்றின் அறிக்கை”யில் பிரதேச செயலாளர் மட்டத்தில் CoViD-19 தொற்றை கட்டுப்படுத்தும் ஏனைய 3 மாறிகளுடன் முஸ்லிம்களின் சனத்தொகையும் ஒரு மாறியாக குறிப்பிடப்பட்டுள்ளது.அறிக்கையில் தரப்பட்டுள்ள மாறிகள் பின்வருமாறு;1. CoViD -19 நோயாளிகளின் எண்ணிக்கை2. தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை3. சனத்தொகை செறிவு4. முஸ்லிம் சனத்தொகை (பிரதேச செயலாளர் மட்டத்தில்)முஸ்லிம் சனத்தொகை செயலாளர் பிரிவு மட்டத்தில் CoViD-19 பரவலுக்கான ஆபத்துக் காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை இங்கு தெளிவாக காணமுடிகிறது. அறிக்கையின் 19ஆவது பக்கத்தில், ஒவ்வொரு மாறிக்கும் கொடுக்கப்பட வேண்டிய பெறுமான அட்டவணை ஒன்றும் தரப்பட்டுள்ளது. அந்த பெறுமான அட்டவணையில் “முஸ்லிம் சனத்தொகை” என்ற மாறிக்கு அதிஉயர் குணகப் பெறுமானம் கொடுக்கப்பட்டுள்ளது. அது 0.9446 ஆகும். இது CoViD-19 நோயாளி என்ற மாறிக்கு கொடுக்கப்பட்டுள்ள 0.8260 என்ற குணகப் பெறுமானத்தை விடவும் உயர்வானதாகும்.இலங்கையில் ஒரு புவியியல் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் மட்டத்தில் முஸ்லிம் சனத்தொகையை ஒரு புள்ளிவிபர தொகுதியில் CoViD-19 தொற்றுக்கான ஆபத்துக் காரணியாக வகைப்படுத்துவதற்கான விடயத்துக்கு தொற்று தொடர்பான எந்த அடிப்படையும் இல்லை. இது விடயமாக CoViD-19 தொற்றுக்கான காரணிகளுள் ஒன்றாக ஓர் இனத்தை பெயர் குறிப்பிடுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.குறித்த அறிக்கையை நாங்கள் கேள்விக்குட்படுத்துகிறோம் என்பதோடு, ஏனைய மதங்களுக்கு மாறுபட்ட வகையில் செயலாளர் பிரிவு மட்டத்தில் முஸ்லிம் சனத்தொகையை தனிப்படுத்தி ஏனைய புள்ளி விவர தொகுதிகளுடன் எவ்வாறு அடையாளப்படுத்த முடியும் என்று இந்த அறிக்கையை தயாரித்தவர்களிடம் கேட்கின்றோம். அதேசமயம், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கலாநிதி சஞ்ஜீவ வீரரத்ன, தனது டுவிட்டர் பதவில் இந்த அறிக்கை வரம்பு மீறியதும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் சம்பந்தப்படாததுமான “ஒரு குப்பை” என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், முஸ்லிம் சனத்தொகையை ஒரு மாறியாக பயன்படுத்துவது அறிவு சார்ந்த குறைபாட்டைக் காட்டுவதாகவும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது என்பதோடு, இந்த அறிக்கையுடன் தான் ஒருபோதும் உடன்படவில்லை என்றும் இவ்வாறான மோசமானதொரு செயற்பாட்டுடன் தன்னால் ஒருபோதும் இணங்கிப்போக முடியாது என்றும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினருக்காக தான் மிகவும் மனம் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது எங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது .இந்த அறிக்கையானது ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான இனத் துவேஷத்தை வளர்க்கும் கலாசாரத்தை கற்பிக்கும் செயற்பாட்டுக்கு மிகத் தெளிவான சான்றாகும். எந்தவொரு தெளிவான காரணங்களும் இல்லாக நிலையில், முஸ்லிம்களை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதும் ஓரங்கட்டுவதும் இதன் நோக்கமாகும்.இப்போது நடந்தேறும் சிறுபான்மை மக்களை உளவியல் ரீதியாக ஓரங்கட்டும் நவீன யுக்திகளில் இதுவும் ஒன்றாகும். இரகசியமாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான பாரபட்சமான விபரக் குறிப்புகள் அப்பாவி பொதுமக்கள் மத்தியில் “தெளிவான உண்மைகள்” என்று சர்வதேச மயப்படுத்தப்படுகிறது. இவ்வாறான துணைபுரை பிணைப்புக்கள், சிறுபான்மை இனத்தை காலாசார ரீதியாக ஓரங்கட்டும் நிறுவனமயப்படுத்தலுக்கு பெரிதும் துணை போகின்றன. இது கண்டிக்கப்படவேண்டிய சமூக அநீதியாகும். அத்துடன் சமூக கட்டமைப்பை தகர்க்கும் வன்முறையுமாகும் .இந்த அறிக்கையானது அதன் அசல் வடிவத்தில் பலருக்கும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. எனக்கும் இது கிடைக்கப்பெற்றுள்ளது. என்னைப்போல பலரும் இதனை பெற்றக்கொண்டுள்ளனர். இந்த அறிக்கையை உடனடியாக நிராகரிக்குமாறும், முஸ்லிம் சனத்தொகையை CoViD-19 ஊக்குவிப்பு மாறியாக குறிப்பிட வேண்டாம் எனவும், பாரபட்சமான கணித்தல் முறையை ஒரு இனத்துக்கு எதிராக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் அநீதியானதும் பக்கச்சார்பானதுமான முறையில் CoViD-19 தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடு என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இப்படியான செயற்பாடுகளை அரசு மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். நாங்களும் இலங்கையரே, எங்களையும் சமமாக கணித்து நடத்துமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம்.மக்கள் அரசாங்கத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைத்து மதிப்பிட வேண்டாம். முஸ்லிம்களை தனிமைப்படுத்தி பார்ப்பதை நிறுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் உண்டாகிவரும் ஆழமான பிரிவினைகளை தவிர்க்கலாம்.ரவுப் ஹக்கீம்தலைவர்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

source: rauff Hakeem Facebook

Leave a Reply

You missed

PTA – பயங்கரவாத தடைச் சட்டத்ததை நீக்கும் முயற்சி | வாக்குறுதியை நிறைவேற்ற அரசு திட்டம்..!
——————————————-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றார்.

டிரம்பின் அறிவிப்பால் 43,500 கோடி ரூபாவை இழந்த கொழும்பு பங்குச் சந்தை!
——————————————————————–
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அறிமுகப்படுத்திய புதிய இறக்குமதி வரி கொள்கைகள், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் பல பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஆசியாவில் உள்ள பல பங்கு சந்தைகளும் இதனால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நிலவும் சூழலில், இலங்கையின் ஒரே பங்கு சந்தையான கொழும்பு பங்கு சந்தையும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவின் பலியாக மாறியுள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களாக கொழும்பு பங்குச் சந்தை பெரும் சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வர்த்தக முடிவில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 16,007.44 புள்ளிகளாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (07) வர்த்தக முடிவில் அது 14,660.45 புள்ளிகளாக பெரும் சரிவை பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் 1,346.99 புள்ளிகள், அல்லது 8.41% சதவீதம் கொழும்பு பங்கு சந்தை சரிந்துள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 02 ஆம் திகதி வரை 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்த கொழும்பு பங்கு சந்தையின் மொத்தப் புரள்வு, நேற்றைய நிலவரப்படி 5,253.18 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபாய், அதாவது 43,537 கோடி ரூபாய், கொழும்பு பங்கு சந்தையிலிருந்து இழக்கப்பட்டுள்ளது.

இதில், நேற்று ஒரு நாளில் மட்டும் பங்கு சந்தையில் இழந்த மதிப்பு 227 பில்லியன் ரூபாயாகும்.

இது ஒரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி சற்றுமுன் விடுதலை..!

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது..

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டதாக அவரின் சகோதரர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 22 ம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


தனது சகோதரின் நியாயமற்ற தடுத்துவைப்புக்கு எதிராக   குரல் கொடுத்த மற்றும் பணியாற்றிய அனைத்து தரப்புக்கும் தான் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார்.