கொழும்பு நகரில் சிறியளவான மழைவீழ்ச்சியின் போதும் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர் நதீகா தமயந்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கால்வாய்களை மறித்து பல கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதற்கு பிரதான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதியற்ற கட்டடங்களை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டவிரோதமான நிர்மாணங்கள் அகற்றப்பட்டதன் பின்னர் அவற்றின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர் நதீகா தமயந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply