பொதுவாக எல்லா மத்திய கிழக்கு நாடுகளிலும் விசாக்களை சரிபார்த்துக்கொள்ள அந்தந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் குடிவரவு / குடியகல்வு அமைச்சுக்கள் இணையத்தள சேவைகளை வழங்குகிறார்கள். நீங்கள் விசா பிரதியை பெற்ற உடன் – அந்த இணையத்தளத்தில் பிரவேசித்து உங்களுக்கு வழங்கப்படும் விசா இலக்கத்தைக் கொண்டு அல்லது உங்களின் கடவுச்சீட்டு இலக்கத்தைக் கொண்டு உங்களின் பெயரில் விசாக்கள் தயாராக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்துகொள்ள முடியும். (இணையத்தள முகவரிகள் தேவைப்பட்டால், தேவைப்படும் நாட்டின் பெயரை கமெண்ட் செய்யுங்கள்)
மத்திய கிழக்கில் வழங்கப்பட்ட வீசாக்களை மறு பரிசீலனை செய்ய உதவிகள் தேவைப்படுபவர்கள் KVC ஊடகத்தை தொடர்புகொள்ள முடியும்.
அமீரகத்தில் அல்லது சவூதி அரேபியாவில் இயங்கும் பிரபல நிறுவனர்களில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி, அந்த நிறுவனங்களின் பெயரில் சம்பளம் உள்ளிட்ட விபரங்கள் கொண்ட ஒப்பந்தக்கடிதங்களை போலியாக தயார் செய்து உங்களை ஏமாற்றக்கூடும், அப்படி ஒரு நிலை ஏட்படும் போது, உங்களுக்கு தொழில் வழங்கும் அந்த நிறுவனத்தில் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் பிரவேசித்து அவர்களை தொடர்புகொண்டு உங்களுக்கு வழங்கப்பட்ட தொழில் வாய்ப்பு உண்மையானதா என விபாரம் கேளுங்கள், குறைந்த பட்சம் 24 மணி நேரத்தில் உங்களுக்கு உறுதியான பதில் வந்துவிடும்.
ஒரு முக்கியமான விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பொதுவாக மத்திய கிழக்கில் இயங்கவும் பிரபல நிறுவனங்கள் உங்களுக்கு வேலை வாய்ப்பொன்றை வழங்கினால், அவர்களே உங்களுக்கான சகல செலவுகளையும் பொறுப்பெடுப்பார்கள், அந்த செலவுகளில், உங்களுக்கான விமான டிக்கெட் மற்றும் விசாக்கள் உள்ளடங்கப்படும். எனவே தயவு செய்து போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.