வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !!

தற்போதைய கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து கஷ்டப்படும் சிலரை இலக்கு வைத்து போலியான வெளிநாட்டு விசாக்களை அச்சடித்து விநியோகம் செய்து பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. தயவு செய்து வெளிநாட்டுப் பயண மோகத்தால் நீங்கள் பணத்தை பறிகொடுக்க வேண்டாம் என KVC ஊடகம் பொதுமக்களை தயவாக கேட்டுக்கொள்கிறது.

Be aware of Fake employments

கத்தார், ஐக்கிய அமீரகம், சவூதி அரேபியா, குவைத் மற்றும் இதுபோன்ற ஏனைய மத்தியகிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் பயணம் மேட்கொள்ள நீங்கள் விரும்பினால், பணம் செலுத்துவதட்கு முன்னர் அந்த வேலைவாய்ப்பு தொடர்பாக சகல விடயங்களையும் உரிய முறையில் சரிபார்த்து கொள்ளுங்கள்.

By Admin

Leave a Reply