கத்தார் வாழ் இலங்கையர்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள் ஒன்றை “அக்கரையில் நாம்” எனும் அமைப்பு முன் வைக்கிறது. எமது தாய் நாட்டுக்கு செல்வதற்கு அதிக பணம் வசூலிக்கிறது இலங்கை நாடு மாத்திரம் இந்த மாதம் நான்கு விமானங்கள் கட்டாரில் இருந்து இலங்கைக்கு செல்கிறது அதில் பணம் உள்ளவர்கள் மாத்திரம் செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அரபி நாட்டில் அதிகமான பணியாட்கள் குறைந்த சம்பளத்தில் இருக்கிறார்கள், குறைந்த பட்சம் 1000 ரியல்கள் மாத சம்பளமாக உள்ளது. அதாவது இலங்கை நாணய மதிப்பின் படி 53000/- ரூபாய் ஆகும். அவர்கள் எப்படி இத்தனை பணம் செலவு செய்து தாய் நாட்டுக்குச் செல்வது??

அதனை கருத்தில் கொண்டு “அக்கரையில் நாம்” என்னும் அமைப்பு ஒரு கையெழுத்து பேட்டையை இன்று (04-03-2021) ஆரம்பித்து உள்ளது. அனைவரும் இந்த கையெழுத்து பேட்டையில் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

இதனை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி நமது நிலைபாட்டை தெரிவிப்பதற்காகவே இந்த முயற்சியை தாம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து KVC யின் ஊடக முக்கியஸ்தர்கள் குறித்த இடத்துக்குச் சென்று கையொப்பத்தையிட்டு முழு ஒத்துழைப்பை வழங்கி மேலதிக தகவல்களை வினவிய போது, இவ்வமைப்பானது சுமார் 28 நாடுகளில் உள்ள தனது கிளைகளில் இந்த கையொப்ப பேட்டையை ஆரம்பித்துள்ளது எனவே இம்முயட்சி நிச்சயம் வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

கட்டார் வாழ் இலங்கையர்கள் தொழிலை இழந்து உணவு உறைவிடம் இன்றி தவிக்கும் இக்கால கட்டத்தில் இலங்கை அரசு அதிகூடிய விலையில் விமான டிக்கெட்களை விட்பனை செய்வதும் ஹோட்டல் பணம் என இலட்சக்காண ரூபாய்களை அறவிடுவதும் மிகப்பெரிய அதிருப்தி நிலைக்கு இலங்கையர்களை தள்ளிவுள்ளது.

By Admin

Leave a Reply