அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. ஆனாலும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் தாமதமாகிறது என்று அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பிடன் முறைகேடு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் தேர்வுக் குழுவின் 270 வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 50 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். ஆனாலும் தபால் வாக்குகளை எண்ணும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதால் இறுதி முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்: கடந்த 4 ஆண்டுகளில் நான் செய்த சேவைகள் அனைத்தும் வாக்குகளாக மாறியுள்ளது, மேலும் வாக்குகள் எண்ணும் நிலையங்களில் நம் கட்சியினர்கள் பார்வையிட அனுமதி வழங்க மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பதிவான வாக்குகளை முறையாக எண்ணினால் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும், முறையற்ற வாக்குகள் மூலம் ஜோ பிடன் தேர்தலில் வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.