யோகட் மற்றும் பால் பைக்கற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யோகட் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பால் பைக்கற் ஒன்றின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.