யார் இந்த பாஷாத்???
நேற்று கடலுக்குச்சென்று காணமல் போன சகோதரர் பாஷாத் அவர்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஒருவர் என்பதை அவர் பற்றிய பதிவுகள் முகப்புத்தக வாயிலாக அவரது நண்பர்கள்,உறவுகள் வாயிலாக பதிவிடப்பட்டதை காணக்கிடைத்தது. அவருக்கா மனம் உடைந்து பிரார்த்திக்கும் பல உள்ளங்களை காணக்கிடைத்ததில் மனதுக்கு திருப்தி அளிக்கிறது.
வாழும்போது பிறரின் மனம் வென்று வாழவேண்டும் என்பதற்க்கு சகோதரர் பாஷாத் ஒரு உதாரணம் …அனைவரோடும் நட்பாக பழகும் பாஷாத் தாம் பிறந்த ஊரைவிட திருமணம் முடித்த ஊரான குச்சவெளியை நேசித்ததே அதிகம் ..சமூக சேவைகளில் அக்கரை கொன்ட இவர் பல் வேறு சமூக சேவைகளில் தன்னாலான பங்களிப்பை செய்திருக்கின்றார் ..ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர் யாராக இருந்தாழும் தைரியமாக எதிர்த்துப்பேசக்கூடிய பாசாத் ஒரு தைரியசாலி என்ற நாமம் இளைஞர்களால் உச்சரிக்கப்படாமலில்லை..
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பாசாத் குழந்தைத்தனமாகவே நடந்து கொள்வார் என்று அக்கம் பக்கத்தார் கவலையாக கூறக்கேட்டோம். வாழும் போதே பாராட்டப்படவேண்டிய நண்பர் பாஷாத் காணமல் போனது குச்சவெளி மக்களுக்கு மிகுந்த துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது. காணமல் போய் இன்றுடன் 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது வருகைக்காய் வழிமேல் விழி வைத்துக்காத்திருக்கும் மனைவி,மக்கள்,குடும்பத்தார்,நண்பர்கள்!!!