திருகோணமலைத் தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய அமைப்பாளர் நியமனம்
திருகோணமலைத் தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய அமைப்பாளராக குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ ஏ. முபாறக் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.S. தௌபீக் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய அமைப்பாளர் சபீக் றஜப்தீன் அவர்ளினால் இன்று (18. 03. 2020) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.S. தௌபீக் அவர்களினால் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வின் போது அரசியல் உச்சபீட உறுப்பினர் அன்ஸார் ஹாஜியார், ஆசிக், பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ நசார் , முத்தலிப் நானா, பிரதேச சபை உறுப்பினர் கௌரவ மீசான், சபீக், பரீத் சேர், பளீல் அமீன், நகர சபை உறுப்பினர் மஹ்சூம், தௌபீக், மற்றும் கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.