பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் நீரில் மூழ்கிய ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (12) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் விஹாரகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவராவார்.

இவர் நேற்று வெள்ளிக்கிழமை (12) காலை மெதிரிகிரிய கவுடுலு குளத்தில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply