மக்களின் வாக்குகளின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அந்த பதவிக்கு வருவது கடினமான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பினரை தற்போதைய ஜனாதிபதி ஆதரிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.