இன்றைய நவீன தொழிநுட்பத்தின் துணையோடு தகவல் பரிமாற்றம் மின்னல் வேகத்தில் வளர்ச்சியடைந்து  எம்மை வியக்க வைத்துக்கொண்டிருக்கிறது. உலகில் எதோ ஒரு பகுதியில் நடக்கும் ஒரு சிறு விடயம் கூட இன்று ஒரு சில நிமிடங்களில் காட்டுத்தீயை விட கட்சிதமாய் எல்லோரிடமும் வந்து சேர்க்கிறது. இந்த வளர்ச்சியிலும் சாதக பாதக விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது, அவைகளை இன்னுமொரு பதிவின் ஊடாக வழங்க முயட்சி செய்கிறேன், இந்த பதிவின் மூலம் பெருகி வரும் தகவல்களுக்கு மத்தியில் போலியான தகவல்களின் தாக்கமும் அவைகளை கட்டுப்படுத்த நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில விடயங்களை மட்டுமே நோக்கவுள்ளோம் !

நாள்தோறும் அதிகரிக்கும் தகவல் (Information)

இணையத்தின் வளர்ச்சி, தொழிநுட்ப வளர்ச்சி, மனித வளர்ச்சி என்று இன்றைய உலக வளர்ச்சியில் பெருக்கெடுக்கும் தகவல்கள் நாளுக்கு நாள் எல்லையின்றி அதிகரிப்பதால் உண்மையான தகவல்களை தரம்பிரித்து உறுதிசெய்வது மிகப்பெரிய சவாலாகவே அமைகிறது.  அமெரிக்காவின் புகழ்பெற்ற சஞ்சிகைகளில் ஒன்றான Forbes தனது ஆய்வறிக்கையில் நாள் ஒன்றுக்கு உருவாக்கப்படும் தகவல்களின் எண்ணிக்கை தொடர்பாக வெளியிட்ட புள்ளி விபரம் நம்மை அதிர்ச்சிக்குள் தள்ளிவிடுகிறது, கடந்த 2018ல் வெளியான அந்த ஆய்வறிக்கையில் நாளொன்றுக்கு சுமார் 2.5 குவாட்ரில்லியன் (அதாவது ஒரு குவாட்ரில்லியன் என்பது ஆயிரம் கோடி கோடி) டேட்டாகள் உருவாக்கப்படுகின்றன  “There are 2.5 quintillion bytes of data created each day at our current pace” (Forbes, 2018). சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தகவல்களின் உருவாக்கம் மிகப்பெரிய அளவில் காணப்பட்டதெனில் இன்றைய 2020ல் எந்தளவுக்கு பெருக்கெடுத்து இருக்கும் என்பதனை நாம் கவனிக்க வேண்டும்.  

Daily Search data

கூகுள் தேடுபொறி (Google Search Engine)

கூகுள் இல்லாத உலகத்தை எவருமே கட்பனை செய்து கூட பார்க்க மாட்டார்கள், எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உடனடியாக கூகுளின் துணையை நாடும் மனோ நிலை அல்லது இயற்கயான சுபாவம் இன்று எல்லோரிடமும் இடம்பிடித்து விட்டது. இந்த கூகுள் தேடு பொறி மூலம் இன்று வினாடி ஒன்றிக்கு சுமார் நாட்பதாயிரம் கூகுல் தேடல் இடம் பெறுகிறது (Google Search) (இதனை இந்த லிங்க் மூலம் காணலாம் – https://www.internetlivestats.com/google-search-statistics/). கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கூகுள் ஆரம்ப கட்டமாக சுமார் 10 ஆயிரம் தேடல்களை மாத்திரமே மேட்கொள்ள முடியுமாக அமைக்கப்பட்டிருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கூகுள் தேடுபொறி மூலமாகவும் தகவல்கள் அதிகரிப்பு பன்மடங்காக பெருகுவதை அவதானிக்க முடியும்.

தகவல் விருத்தி இன்றய உலகின் வியாபார மற்றும் வணிக வளர்ச்சியில் மிகப்பெரிய செல்வாக்கையும் செலுத்தி வருவதை நாம் எல்லோருமே கண்ணூடாக காண்கிறோம். இன்றைய சந்தைப்படுத்தலில் 100 சதவீதம் இந்த data (டேட்டா) அல்லது information என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தகவல்கள் தனக்கென ஒரு இடத்தை முன்னிலையில் தக்கவைத்துள்ளது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தை பிரயோகங்கள் கூட இன்று டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு பல பன்னாட்டு நிறுவனங்களால் பணமாக்கப்படுகிறது !!

தொடரும் …..

By Admin

Leave a Reply