01- உங்களுக்கு கிடைக்கும் எல்லாத் தகவல்களையும் பகிராதீர்கள். பிறருக்கு அவசியமான தகவல்களை மாத்திரம் பகிருங்கள்(Share). பகிர்வதற்கு முன் சற்று சிந்தியுங்கள்.

02- கிடைக்கப்பெறும் தகவல்கள் உத்தியோகபூர்வ தரப்புகளினால் வெளியிடப்பட்டதா என்பதனை அவதானியுங்கள்.

03- உலக சுகாதார நிறுவனம், அரசாங்க தகவல் திணைக்களம், சுகாதார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம் பின்பற்றுங்கள்.

04- நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதள நிறுவனங்களின் செய்திகளை மாத்திரம் பின்பற்றுங்கள்.

05- தகவல்களை உறுதிப்படுத்த முடியாவிட்டால் அவை பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என்று தேடுங்கள். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் உங்களுக்கு தெரிந்த அதிகாரிகள், ஊடகவியலாளர்களின் உதவியை நாடுங்கள்.

06- அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரினால் வெளியிடப்படும் மருந்துகளை மாத்திரம் பின்பற்றுங்கள்.

07- கோவில்-19 நெருக்கடி காலத்தில் மதம், இனம், பிரதேசம், அரசியல் சார்ந்த கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

போலிச் செய்திகளை உருவாக்குதல், பரப்புதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். உங்களின் சமூக ஊடக பதிவுகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது என்பதனை மறந்து விடாதீர்கள்.

Leave a Reply