Covid-19 அச்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று 21.04.2020 புல்மோட்டை நூராணியா நகர், அரபாத் நகர் பகுதிகளில் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இதில் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் S.A.C.M.நசார் மற்றும் பிரதேச சபையின் ஊழியர்கள் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்கள். அத்துடன் தவிசாளர் அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து தங்கள் குறைகளைக் கேட்டறிந்ததுடன் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.