காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியாமல் பிரேசில் திணறி வருகிறது. கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து, வைரஸ் பரவலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளனான உலகின் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 1400 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பதிவாகி இருப்பதை அடுத்து, கோவிட் 19 மருத்துவ பரிசோதனையை பிரேசில் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, சோதனை கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் பரிசோதனை செய்து கொள்ளவில்லை.

தற்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருப்பதால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வந்தேன் என தெரிவித்தார். அமெரிக்காவிலும், ஒரே நாளில் 26,000 பேரை தொற்றி இருக்கும் கோவிட் 19 வைரஸ், 850 உயிர்களை பறித்து சென்றுள்ளது. மெக்சிகோ, ரஷ்யா, பிரிட்டன் பெரு, சிலி, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலும் வைரஸ் தொற்றும் உயிரிழப்புகளும் மளமளவென அதிகரித்து வருகிறது. 210க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுவரை 82 லட்சத்து 57 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 6,600 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 4 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவில்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக அங்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பற்றாக்குறையாக உள்ளது. எனவே, அங்கு நோய் தாக்குதலுக்கு உள்ளான நபர்களை சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு கடுமையாக திணறி வருகிறார்கள்.

(By Thinakaran)

By Admin

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.