இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) பிற்பகல் நாட்டிலிருந்து விடை பெற்றுச் சென்றார்.
பிரதமர் இம்ரான் கானுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதோடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரும் அவரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்…
இதேவேளை, விளையாட்டுத்துரை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது, இம்ரான் கான் தனது கையெழுத்துடனான கிரிக்கெட் மட்டையை பரிசளித்ததோடு, நாமல் ராஜபக்ஷவும் தனது சார்பில் நினைவுப் பரிசொன்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.