இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன் போது முதலீடுகள், வர்த்தக மேம்பாடு, விவசாயம், கல்வி போன்ற துறைகள் தொடர்பில் பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய ஐந்து முதலீட்டு ஒப்பந்தங்கள் இதன் போது கையெழுத்திடப்பட்டன. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்த ஒப்பந்தங்கள் முக்கியமானது என பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை கலாசார மற்றும் சமய ரீதியில் ஆழமான இருதரப்பு ஒத்துழைப்பு கொண்ட நாடுகளாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார். இந்த நிலைமை நீண்டகால நட்புறவுக்கு வழியமைக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தமது அழைப்பை ஏற்று சவால்களுக்கு மத்தியில் நாட்டிற்கு வந்தமை தொடர்பிலும் பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தார்.

By Government news

By Admin

Leave a Reply