திருகோணமலை பிராதான வீதியில் அமைந்துள்ள பலுகஸ்வேவ – கல்லோயா புகையிரத நிலையங்களுக்கிடையில் சுமார் 125 மைல் 58 சங்கிலியில் அமைந்தள்ள புகையிரதக்கடவையானது திருத்த வேலை காரணமாக நான்கு நாட்களுக்கு மூடப்படவுள்ளது.
2022 ஜனவரி மாதம் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் காலை 07 மணி முதல் பகுதியளவிலும், 2022 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி முழுமையாகவும் மூடப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதையானது முற்றாக மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில்,1. ஹபரண மரதன்கடவல வழியாக பயணம் செய்யும் வாகனங்கள் கெக்கிராவ தம்புள்ள வழியாகவும்;, 2. மரதன்கடவல ஹபரண வழியாக பயணம் செய்யும் வாகனங்கள் தம்புள்ள கெக்கிராவ வழியாகவும், 3. இலகு வாகனங்கள், அம்புலன்ஸ் மற்றும் ஏனைய வாகனங்கள் ஹபரண மரதன்கடவல புவக்பிட்டியிலிருந்து பலுகஸ்வவ நகரின் ஊடக மரதன்கடவல வழியாக பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.