இலங்கையில் இன்று அதிகாலை பலாங்கொடை எனும் பிரதேசத்தில் வியாபார நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து சம்பவத்தில் 2பேர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும் தாயும் மகனும் படுகாயத்துடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் பலியாகியவர்கள் 50 வயதுடைய தந்தையும், 19 வயதுடைய மகளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.