அமைப்புகளை பதிவு செய்யும் சட்ட கட்டமைப்பின் கீழ் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பதிவு செய்யப்படவில்லை என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் மூலம் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு செயற்படுகின்றன என்பதனையும் கண்டுபிடிப்பது பாதுகாப்பு படையினரின் பொறுப்பாகும் எனவும் கூறியிருந்தார்.
நேற்று 28 மேல்முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி ஜனக்கொடி சில்வா தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது இதனை அவர் தெரிவித்தார்.