மீனவர் படகுகளை சேதமில்லாமல் கொண்டுவருவதற்கான நடவடிக்கை
சல்லிமுனை மீனவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மீனவர்களின் படகுகள் சேசதமடையாமல் கரைக்கும் உரிய இடத்திற்கும் கொண்டு செல்வதற்கு தடையாக இருக்கின்ற கற்களை அகற்றி நடவடிக்கை எடுப்பதற்காக கரையோர பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களான பொறியியலாளர் துலசிதாசன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பாயிஸ் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை (03. 03. 2020) குச்சவெளி சல்லிமுனைக்கு விஜயம் செய்திருந்தனர். பிரதேச சபை உறுப்பினர் மீசான் அவர்களின் தலைமையில் குழு விஜயம் செய்திருந்தது.