இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சில அத்தியாவசிய தேவைக்கான சேவைகளும் முடக்கப்பட்டன.

ஆனால் தற்போது உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அத்தியாவசிய உணவு வழங்கள், அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் ஆகியவை கொவிட் 19 நோய்த்தடுப்பு அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாட்டிலுள்ள சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவினுள்ளும், நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மாவட்ட எல்லையினுள்ளும், பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியிலும் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை ஜனாதிபதியின் பணிப்புரையின் அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, பதில் பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், உணவு ஆணையாளர், மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

மேலும் அரிசி விநியோகம் குறைவடைவது நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்புக்கு அதிக இடர்நிலைமையை தோற்றுவிப்பதாக அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply