இந்தியாவும் (India) ஜப்பானும் (Japan) இணைந்து நிலவின் தரைப்பகுதியில் ஆய்வூர்தியை இறக்கி ஆய்வு செய்யும் திட்டம் 2023ம் ஆண்டிற்கு பின் செயல்படுத்தப்படும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சா அறிவித்துள்ளது.

நிலவின் துருவப் பகுதியை ஆய்வு செய்யும் திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுத்த தயாராக உள்ளன. இது தொடர்பான முக்கிய விடயங்களை ஜப்பான் நிறுவனம் ஜாக்சா வெளியிட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் இறங்கும் லேண்டர், லேண்டரிலிருந்து வெளிப்பட்டு நிலவின் தரையில் ஆய்வு செய்யும் ஆய்வூர்தி ஆகிய இரண்டும் இத்திட்டத்தில் இடம் பெறுகிறது. இதன்படி லேலண்டரையும், ஆய்வூர்தியையும் ஜப்பான் வடிவமைக்கிறது. தரையிறக்கும் அமைப்பை இஸ்ரோ தயாரிக்க உள்ளது. ஜப்பானில் உள்ள மிட்ஸுபிஷி தயாரிப்பில் உருவாகும் எச் 3 ராக்கெட் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நிலவின் துருவப் பகுதியில் தண்ணீர் இருக்கலாம் என கருதப்படும் நிலையில் நீரானது என்ன வடிவில் எந்த அளவு உள்ளது என்பதையும், எதிர்காலத்தில் அதை விண்வெளித் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியுமா என்பதையும் இஸ்ரோவுடன் இணைந்து ஆய்வு செய்ய இருப்பதாக ஜாக்சா அறிவித்துள்ளது.

By Admin

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.