உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலான இடங்களில் மக்கள் அரசாங்க சட்டத்தை மதித்து வீடுகளில் இருந்து வருகின்றனர். ஆனால் கவலைக்குரிய விடயம் எமது இலங்கை திருநாட்டின் ஜனாதிபதி மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஒன்றுதான் மக்களை வீடுகளில் இருக்கும் படி வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். ஆனால் நம்மில் எத்தனை பேர் அந்த சட்டத்தை மதித்து நடக்கிறோம் என்று பார்ப்போமானால் குறைவானவர்கள் என்று சொல்ல முடியும்.

ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்த காலத்தில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான பணிவான வேண்டுகோள்: அரசாங்க சட்டத்தை மீறி யாரும் வெளியே போகவேண்டாம். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் நினைத்த படி நடக்காமல் சற்று எல்லோரையும் சிந்தித்து செயல்படுங்கள்.

சில மனிதர்கள் சிந்திக்கிறார்கள் நாம் பிரதான வீதியால் வெளியே போகாமல் உள் வீதியால் போனால் பிரச்சினை இல்லை என்று அப்படிப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகள், மனைவி, அம்மா, அப்பா, சகோதரம் ஆகியோர்க்கு நீங்களே நோயைக் கொடுக்குறீங்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

ஆகவே மக்கள் அனைவரும் அரசாங்க சட்டத்தை மதித்து வீட்டிலேயே இருந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு எமது KVC குழுமத்தின் ஊடாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply