ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு தேசிய அமைப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க பிரிவு நியமித்துள்ளது.

அத்துடன்குறித்த சங்கத்தின் பொதுச்செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொழிற்சங்கத்தின் தலைமைப் பதவியை வகித்த ஹரின் பெர்ணான்டோவும், பொதுச்செயலாளராக செயற்பட்ட வடிவேல் சுரேசும் சஜித் அணியில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற இந்நிலையில் இவ்விருவருக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சி இடைகால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான மூன்று தொழிற்சங்கங்களுள், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஒன்றாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply