ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தினுள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் மீன், மரக்கறி, பழங்கள், பேக்கரி பண்டங்கள், இறைச்சி உட்பட அத்தியாவசிய பொருட்களை பைசிக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதி.
விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் உரிய அனுமதி அட்டையை பெற்று ஊரடங்கு சட்ட நேரத்திலும் வியாபாரத்தில் ஈடுபடுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.