நேற்று(14) வடக்கு, கிழக்கு மற்றும் தமன்கடுவ மாவட்டங்களின் தலைமை சங்கத் தலைவர், பிக்கு கூட்டமைப்பின் பதிவாளர், அரிசிமலே வனத்தின் தளபதி.
பனமுரே கிலகவன்ச நாயக்க தேரர்.
அவர்களை குச்சவெளி சலப்பையாறு பகுதியில் அமைந்துள்ள அவரது விகாரையில் குச்சவெளி பொது ஜன பெரமுன குழு, குச்சவெளி பழைய மாணவர்கள் சங்கம் குச்சவெளி பிரதேச ஊடக செயலாளர், ஓய்வு பெற்ற பல்வைக்குள வித்தியாலய அதிபர் மற்றும் தி/அந்நூரியா மு.ம.வி.மாணவ மாணவிகளும் மஹா நாயக்க தேரர் அவர்களை சந்தித்தனர்.

இதன் போது குச்சவளி பாடசாலையை தேசிய பாடசாலையாக்குவது தொடர்பாக பேசப்பட்டது, அதன் போது மகா நாயக்க தேரர் பேசுகையில்.. இந்த தேசிய பாடசாலை தொடர்பில் தாம் கவனம் எடுப்பதாகவும் தம்மால் ஜனாதிபதி கவனத்திற்க்கு கொன்டு செல்ல முடியுமென்றும் வாக்குறுதியளித்தார். குச்சவெளி பாடசாலை ஒன்றுக்கு தேசிய பாடசாலையை பெற்றுத்தருவதற்க்கான முயற்ச்சியினை தாம் எடுப்பதாக குறிப்பிட்டார். பின்பு ஆசிரிய பற்றாக்குறை தொடர்பில் மாணவி ஒருவர் மிக வேதனையாக வெளிப்படுத்திய விடயம் அங்குள்ள அனைவரையும் கண் கலங்க வைத்தது அது தொடர்பிலும் தாம் ஆராய்வதாகவும் மஹாநாயக்க தேரர் கூறினார்.

மேலும் பேசுகையில் நாட்டின் சம கால நிலமை தற்போது சிறுபான்மை  சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் இதனை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் எவ்வாறான அனுகுமுறைகளை சிறு பான்மை சமூகத்தினர் கையால வேண்டும். இவ்வாறான பல விதமான விடயங்களை மேற்க்கோள் காட்டி  அன்பன முறையில் தமக்கு சொந்தமான பானியில் புண்ணகையோடு  எடுத்துக்கூறினார்.

இதன் போது தேசிய பாடசாலையின் அவசியம் தொடர்பில் பல விடயங்கள் முன்வைக்கப்படட்டு அதற்க்கான நியாயமான காரணங்களும் சுட்டிக்காட்டப்பட்டது.

குச்சவெளிக்கான பொதுவான மைதானம், இளைஞர் படையனி உறுவாக்கம் இவ்வாறான பல அபிவிருத்தி முன்னெடுப்புகள் தொடர்பில் தாம் அக்கறை செலுத்துவதாக குறிப்பிட்ட மஹாநாயக்க தேரர்  தேசிய பாடசாலையானது குச்சவெளிக்கே பொருத்தமானது தாம் அது தொடர்பில் உயர்மட்டத்தில் பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

குச்சவெளி பிரதேசத்தில் இன மத பேதம்  பாராமல்  தமது பணிகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் அதற்க்கு எமது ஒத்துழைப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply