நாட்டில் தற்பொழுதுள்ளஅனைத்து தென்னங்காணி தொடர்பான 1921ஆண்டு இலக்கம் 46 இன் கீழான தெங்கு அபிவிருத்திசட்டத்தின் கீழ் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது.

இதற்கமைவாக எதிர்காலத்தில் தெங்கு உற்பத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மூலமான சேவைகள் மற்றும் ஏனைய நிதியுதவி வேலைத்திட்டத்திற்கு தெங்கு உற்பத்தி சபையில் பதிவுசெய்யப்பட்ட தென்னங்காணிகள் மாத்திரமே தகுதிபெறும். 

நாட்டில் தற்பொழுதுள்ள தென்னங்காணிகள் தொடர்பாக சரியான தரவுகளை முன்னெடுத்தல், காணிஅபிவிருத்தி திட்டத்தை வகுத்தல், தென்னங்காணிகள் மூலமான அறுவடைகளை சரியான முறையில் கண்காணித்தல் மற்றும் தென்னங்காணிகளை பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை முன்னிலைப்படுத்தி தெங்கு உற்பத்தி சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை பிரதேச தெங்கு அபிவிருத்தி அதிகாரிகள் மூலமும், 0112861011 மற்றும் 0766904804 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெங்கு உற்பத்தி சபையின் தகவல் பிரிவுடன் தொடர்பு கொண்டு அல்லது 1920 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

By : Government news

By Admin

Leave a Reply