தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை இல்லா விளையாட்டுப்போட்டி இன்று 17/02/2020 அதிபர் M.k.முபீன் அவர்களின் தலைமையில் வெகு விமசையாக இடம் பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ A.S.M.சாஜித்,கோட்டக்கல்விப் பணிப்பாளர் S.மதியழகன் சுகாதார அத்தியட்சகர் S.M.சத்ருதீன் கலந்து கொன்டனர். இவர்களுடன் விஷேட விருந்தினர்களாக..குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ: A.C.மீசான்,A.R.பாத்திமா ரொசானா,A.பர்சானா அவர்களும் கலந்து கொன்டனர். இவர்களுடன் பள்ளிவாசல் நிர்வாகிகள்,சங்கங்களின் தலைவர்கள்,பழைய மாணவர் சங்கம்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சுமார் பி.ப.2மணியளவில் ஆரம்பமாகி மாலை 7:00மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது.

அறிவிப்பாளர் T.A.கியாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவ்விழையாட்டுப்போட்டி தொடர்பாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் S.மதியழகன் உரையாற்றுகையில் குச்சவெளிப்பிரதேசத்திலே மிகவும் சிறப்பாக நடந்தேரிய ஒரு விழையாட்டுப்போட்டியென்று பாராட்டினார். அதனைத்தொடர்ந்து கு.பி.உப தவிசாளர் கௌரவ A.s.m.சாஜித் அவர்கள் உரையாற்றுகையில் இந்த பாடசாலைக்காக தான் எடுத்த முயற்சி வெற்றியளித்திருப்பதாகவும் தனது சேவைக்காலம் நிறைவடையும் முன்பு இந்த புதிய பாடசாலை வழாகத்தை ஒரு பூங்காவைப்போன்று அழகாக மாற்றித்தருவதாகவும் வாக்களித்தார். அதனைத்தொடர்ந்து கு.பி.சபை உறுப்பினர் கௌரவ A.C.மீசான் அவர்களும் உறையாற்றினார்.

இந்நிகழ்வுகளை தொடர்ந்து பரிசளிப்பு,மற்றும் கிண்ணங்கள் வழங்களும் முறையே இடம்பெற்றது முதல் இடத்தினை “மர்வா”இல்லமும் இரண்டாவது இடத்தை” சபா” இல்லமும் மூன்றாம் இடத்தை “மினா” இல்லமும் பெற்றுக்கொன்டது. இதனைத்தொடர்ந்து பிரதம அதிதிகளுக்கான பரிசில்களும்,ஆசிரியர்களுக்கான அன்பழிப்புக்களும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளை அடுத்து ஒருங்கினைப்பாழரும் உப அதிபருமான S.A.முத்தலிப் ஆசிரியர் அவர்களால் நன்றி நவிழல் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து இனிதே முடிவுற்றது.

Leave a Reply