திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானை சாலியபுர கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக்கான அனுமதி கடிதம் இன்று(07/09/2023) வழங்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலிற்கிணங்க குறித்த வீடமைப்புக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

மகளிர் சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் தேசிய முதியோர் செயலகம் ஊடாக திரிய பியச வீடமைப்பு திட்டம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 650000 ரூபா பெறுமதியில் இவ் வீடானது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் இர்பான் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலக முதியோர் சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Kvc Media
Trincomalee

By Admin

Leave a Reply