காற்று நீர் மாசுபடுவதால் கொடிய நோய்கள் பரவுகின்றன என்பது நாம் அறிந்த விஷயமே, ஆனாலும் நோய் ஏற்படும் ஆபத்தை விட நோய் தாக்கி விடுமோ என்ற ஏக்கமே பெரியதாக இருக்கிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் காசநோய் பெரும் நோயாக இருந்தது. 2002ஆம் ஆண்டு “சார்சு”(SARS-CoV) நோய் உலகெங்கும் பரவியது. 2012 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் “மெர்ஸ்”(MERS-CoV) என்னும் நோயால் பலர் பாதிக்கப்பட்டனர்.

ஆக ஏதோ காலத்திற்கு காலம் நோய்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன, நாம்தான் அதற்கு ஒவ்வொரு புதுப்புது பெயர்கள் வைக்கின்றோம். தொற்றுநோய்கள் பரவினால் எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இதே போல தான் ஒவ்வொரு மனிதனும், சுத்தமாகவும், ஒழுக்கமாகவும், நல்ல உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை, மன நிம்மதி, என அனைத்தையும் மனிதன் விரும்புகின்றான்.

நாம் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி மிக முக்கியமான ஒன்று இருக்குமென்றால் அதுதான் “சுத்தம்”. இதைத்தான் இன்று மருத்துவ உலகம் கூறிக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக தண்ணீரால் உறுப்புக்களை சுத்தம் செய்வதை வலியுறுத்துகின்றது. தண்ணீரால் உறுப்புக்களை சுத்தம் செய்வதை “வுழூ” என்ற பெயரில் 1400 வருடங்களுக்கு முன்னால் எங்களுக்கு இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது.

உறுப்புக்களை சுத்தம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது, அவை இன்றைய சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

01- ஒவ்வொரு முறை வுழூ செய்யும் போது பல் துலக்குதல்.

02- ஆரம்பத்தில் மணிக்கட்டு வரை கழுவுதல்.

03- வாய் கொப்பளித்தல்.

04- மூக்கிற்கு தண்ணீர் செலுத்துதல்.(வெளியேற்றுதல் அவசியம்)

05- தாடியைக் கோதிக் கழுவுதல்.

06- விரல்களை கோதிக் கழுவுதல்.

07- ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவுதல்.

08- உறுப்புக்களை தேய்த்து கழுவுதல்.

09- முகம், கை கால்களை நீட்டி கழுவுதல்.

10- தண்ணீரை வீணாக்காமல் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.

இஸ்லாம் கூறும் வகையில் நாமும் சுத்தமாக இருந்தால் நம்மலை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.

உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி இருக்கின்ற விடயம் தான், தொற்றுநோய்கள் பரவுகின்ற இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு செல்லக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.

இதைப்பற்றி 1400 வருடங்களுக்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது” நோயுற்ற மனிதரை (தொற்று நோய்) ஆரோக்கியமானவருக்குப் பக்கத்தில் கொண்டு வரவேண்டாம். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)

Leave a Reply