இலங்கையில் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை இருந்து இதுவரை மொத்தம் 3169 நபர்கள் வீடு திரும்பினார்கள்.

இவ்வாறு வீடு திரும்பியவர்கள் கட்டாயம் 2வாரங்கள் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

மேலும் கூறுகையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஒரு நபருக்கு ஏழு நாட்களுக்குப் பிறகு கோவிட்-19 வைரஸ் இருப்பதை உறுதிசெய்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

Leave a Reply