2009 – மே. யுத்தம் முடிந்தது
2009 – யூன் இலங்கை கொண்டுவந்த முதலாவது பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றம்
2012 – சர்வதேச நாடுகளினால் முதலாவது பிரேரணை
2013 – சர்வதேச நாடுகளினால் இரண்டாவது பிரேரணை
2014 – சர்வதேச நாடுகளினால் மூன்றாவது பிரேரணை
2015 – 30 – 1 பிரேரணை – அரசு அணுசரனை
2017 – 34 – 1 பிரேரணை – அரசு அணுசரனை
2019 – 40 – 1 பிரேரணை – அரசு அணுசரனை
இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கொண்டுவரவுள்ள பிரேரணையே தற்போதைய அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.
எவ்வாறான விடயங்கள் பிரதானமாக கொள்ளப்படவுள்ளது.
1. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜெனிவாவில் ஏற்படப்போகின்ற புதியநிலைமை என்ன?
2. இலங்கை தொடர்பான நகர்வுகளுக்கு என்ன நடக்க போகின்றது?
3. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு என்ன?
4. பாதிக்கப்பட்ட மக்கள் ஆற்றுப்படுத்தப்படுவார்களா?
5 . தற்போது நடைமுறையில் உள்ள நல்லாட்சி அரசின் காலத்தில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணையை தற்போதைய அரசு மீலாய்வு செய்யும் நிலையில் அதன் அடுத்த கட்டம் என்ன?
6. 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள 20 பரிந்துறைகளில் சர்வதேச நீதிபதிகள் விசாரணை, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டு அலுவலகம் உருவாக்கப்படல்
நம்பிக்கையை கட்டியெழுப்பாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களின் மனதை வெல்ல முடியாது. இந்த விடயம் தொடர்பில் மனித உரிமையாளர் ஆணையாளர் என்ன விடயங்களை வலியுருத்த போகின்றார் என்பது மிகவும் அவதானத்திற்குற்பட்ட விடயமாக காணப்படுகின்றது..
ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளின் மனித உரிமை தொடர்பான. 43 வது கூட்டத்தொடர் இம்மாதம் 24 தொடக்கம் மார்ச் மாதம் 20 வரை நடைபெறவுள்மை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் 📝📝
Thaji khan..
Economics special (R) FAC, EUSL