வணக்கஸ்தலங்கள் தொடர்பில் கடந்த மே 27ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மட்டும் கட்டுப்பாடுகளுக்கு அமைய, எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் பள்ளிவாசல்களை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக, இலங்கை வக்ப் சபை அறிவித்துள்ளது. அபாய வளயங்களாக ஏற்கனவே பிரகடப்படுத்தப்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எதிர்வரும் மே 09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் சுகாதாரப் பிரிவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் வக்ப் சபை ஜூன் 15 ஆம் திகதி முதல் பள்ளிவாசல்களை திறப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, வழமையான ஐவேளை மற்றும் ஜும்ஆ கூட்டுத் தொழுகைகள் உள்ளிட்ட விசேட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிகாஹ் (திருமணம்) மஜ்லிஸ் உள்ளிட்ட கூட்டு நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வுழூ செய்யும் பகுதி, மலசலகூட பகுதிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால், வீடுகளிலிருந்து வுழூ செய்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply