கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்று மகாகவி பாரதியார் சொன்னதை செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருவதாக கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
இலங்கையில் ஜல்லிக்கட்டு
தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை அகமகிழ்ந்து பாட்டெடுத்து வாழ்த்துவதாக தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கிழக்கு ஆளுநர் தலைமையில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவினை முன்னிட்டு இடம்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில், சிலம்பாட்டம் முதலிய தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை நிகழ்த்தியமைக்காகவே இவருக்கு இந்த பாராட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதையில்,
இலங்கை கிழக்கு மாகாணத்தின் மேதகு ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்பின் நிமித்தமாய் இல்லம் வந்தார்
இலங்கையில் ஏறுதழுவுதலை மீட்டெடுத்த ஆளுநரைப் பாட்டெடுத்துப் பாராட்டினேன்
ஆளுநருக்கு மகா கவிதை வழங்கி மகிழ்ந்தேன்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’
பாரதி சொன்னது அன்று; காரியம் நடப்பது இன்று.
என குறிப்பிட்டுள்ளார்….